ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 2009 ஜனவரி மாதம் 18 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅறிமுகமான போட்டியில் இருந்து தற்போது வரை தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக டேவிட் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு ஆண்டுகள் அனைத்து தரப்பு போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
தடை காலத்தில் ஆஸ்திரேலிய தெருக்களில் டேவிட் வார்னர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காணொளிகள் சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. இந்த காணொளி பலரது மனங்களை உருக்கும் விதமாக இருந்தது.
டேவிட் வார்னருக்கு மக்கள் தங்களின் ஆதரவுகளை அழுத்தமாக தெரிவித்து வந்தனர். அதன் பின் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்ற டேவிட் வார்னர் மீண்டும் அதிரடி காட்ட துவங்கினர்.
2023 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற டேவிட் வார்னர் காரணமாய் இருந்தார். இந்நிலையில், நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -