CWC Records : 1975 முதல் 2019 வரை..உலக கோப்பை தொடரில் அதிரடி காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்!
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இந்தியர்கள் கிரிக்கெட்டை உணர்வு பூர்வமாக எண்ணுகிறார்கள். 1975 முதல் 2019 வரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 1975இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 113 ரன்களை விளாசினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1979இல் தொடங்கிய இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணியின் ஜி விஸ்வநாத் 106 ரன்களை எடுத்தார்.
1983இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கபில் தேவ் அதிரடியாக விளையாடி 303 ரன்களை குவித்தார். இந்தாண்டில்தான் முதல்முறையாக இந்திய அணி, உலக கோப்பையை கைப்பற்றியது.
1987இல் இந்1987இல் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடந்த முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடக்கும் முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.
ஐந்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1992 இல் நடைபெற்றது. இதில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் அசாருதீன் அதிகபட்சமாக 332 ரன்களை குவித்ததார்.
ஆறாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1996 இல் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் 523 எண்களை குவித்தார்.
1999இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிராவிட் 461 ரன்கள் எடுத்திருந்தார்.
2003இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ரன்களை விளாசினார்.
2019 நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 648 ரன்கள் கொடுத்திருந்தார். இதில் அதிரடி சதங்கள் ஐந்து அடங்கும்.
2007 இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேவாக் 164 ரன்களை எடுத்திருந்தார்.
2011 இல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காட் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 482 ரன்களை குவித்தார். இதில் இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.
2015 இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் தவான் 412 ரன்கள் குவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -