IND Vs PAK : பாகிஸ்தானை பிரித்து எடுத்த இந்திய வீரர் ரோஹித் ஷர்மா!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடந்தால் இரு நாடுகளிலும் அன்றைய தினம் திருவிழா கோலம் பூண்டது போல் இருக்கும். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாமால் உலக ரசிகர்களும் இவ்விரு அணிகளும் மோதும் போட்டியை ஆவலாக கண்டுகளிப்பர் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்று முன்தினம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இவ்விரு அணிகளும் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோதின. இதில் முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள், இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். அடுத்த சில நிமிடங்களில் பாபர் அசாம் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 191 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து களத்திற்கு வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் கில் மற்றும் ரோஹித் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார் . இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிதறடித்தனர். ஷாகின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் கில் .
அடுத்து வந்த கோலி அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஸ்ரேயாஸ் மற்றும் ரோஹித் இணை பாக்கிஸ்தான் பௌலர்களின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்கள். சதத்தை தவறவிட்ட ரோஹித் ஷர்மா 84 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதற்கு அடுத்து வந்த ராகுல் ஷ்ரேயஸ் உடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி அடைய செய்தனர். இறுதியாக ரோஹித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -