IND VS AUS Highlights : சுலபமான இலக்கை அசால்டாக எட்டி பிடித்த இந்திய அணி!
நேற்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மார்ஷ் டக் அவுட் ஆனார். பிறகு கலத்திற்கு வந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
இருவரும் அரை சதத்தை நெருங்கும் தருவாயில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் வார்னர் அவுட்டானார். பிறகு பந்து வீச வந்த ஜடேஜா ஸ்மித்தை டக் அவுட் ஆக்கினார். அடுத்து ஆடவந்த லபூஷன் மற்றும் கெர்ரி இருவரையும் ஜடேஜாவே டக் அவுட் செய்தார். தொடர்ந்து குல்தீப் யாதவ் மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டு ஆக்கினார். தொடக்கம் முதலே தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வேகமாக பெவிலியன் திரும்பினார்கள்.
49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 199 ரன்களை மட்டுமே குவித்தது ஆஸி. இந்திய அணி சார்பாக ஜடேஜா 3 விக்கெட்களையும் குல்தீப் மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட்டுகளையும் பாண்டியா, அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
199 என்ற எளிய ஸ்கோரை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ,இஷான் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட்டாகி ஷாக் கொடுத்தனர். பிறகு கலத்திற்கு வந்த விராட் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக ஆடி இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்கள்.
நிதானமாக ஆடிய கோலி 85 ரன்களில் அவுட் ஆனார். பிறகு இணைந்த பாண்டியா ராகுல் இணை சிறப்பாக விளையாடினர். ராகுல் 97 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது.