கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின்!
உலக கோப்பைக்கு முன் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்றிருந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாதது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியது.
இந்திய அணியில் அஸ்வினை சேர்க்காதது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அஸ்வின் சிறந்த வீரர் அவருடன் நாங்கள் தொடர்ந்து இணைப்பில் தான் இருக்கிறோம் தேவை என்றால் உடனே அவரை களத்தில் இறக்குவோம்”என தெரிவித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் சார்பாக சென்னை வந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வரவேற்றனர்.
BCCI இன்று காலை சமூக வலைதளங்களில் அஸ்வின் பேசும் வகையில் காணொளியை வெளியிட்டு இருந்தது. இதில் பேசிய தமிழ் நாட்டு வீரர் அஸ்வின் “சென்னை எனது தாய் வீடு நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான் சென்னையில்தான் எனது முதல் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. தொடங்கிய இடத்திலிருந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடப்போவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 1991இல் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை காண நானும் எந்த ந்தையும் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தோம்.” என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -