CWC 2023 : உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் பலமும் பலவீனமும்!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதியான நாளை தொடங்க உள்ள நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றுள்ள பத்து அணிகளும் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவரும் அக்டோபர் 8ஆம் தேதி அன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி இரு அணிகளும் சென்னைக்கு வந்துள்ளனர். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் பலத்தையும் பலவீனத்தையும் பற்றி பார்க்கலாம்.
பலவீனம் : இந்திய அணியில் மிட் ஆடரில் இறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார், இவர்கள் இருவரும் கடந்த ஓரிரு போட்டிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினாலும், பெரிதாக இவர்கள் நம்பிக்கையை அளிக்கவில்லை. தட்டையான மைதானங்களை எதிர்கொள்ள போதுமான சுழற்சிந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜாவும் அஸ்வினும் தட்டையான மைதானங்களில் பேட்ஸ்மேன்களை எதிர் கொள்வது கடினமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ப்ளேயிங் லெவனில் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் இடம் பெறுவார்கள் ஒரு வேலை குல்திப் யாதவ் காயமடைந்தால் மாற்று வீரராக அஸ்வின் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் : பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சம பலத்துடன் களமிறங்குகிறது இந்திய அணி. இந்திய அணியின் டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் வரிசை சிறப்பாக உள்ளதால் பேட்டிங்கில் எந்த பிரச்சொனையும் இருக்காத நிலை உள்ளது. அதேபோல் பௌலிங்கில் தரமான பவுலர்களான பூம்ரா, முஹம்மது ஷமி, முகமது சிராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு இறங்குவதால் இந்திய அணி, எதிரணியின் சவால்களை எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -