✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ravichandran Ashwin: ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த ரவிசந்திரன் அஸ்வின்!

ஜான்சி ராணி   |  22 Sep 2024 01:35 PM (IST)
1

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தார் அஸ்வின். இதன் மூலம் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.

2

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 133 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார்.

4

அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 21 ஓவர்கள் வீசினார். அதில், 88 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

5

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்து உள்ளார். இச்சூழலில் அடுத்தடுத்து இந்திய அணி நீண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளதால் முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் அஸ்வின் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6

டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்: முத்தையா முரளிதரன் (இலங்கை) - 67 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 37 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.  ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து) 36 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அனில் கும்ப்ளே (இந்தியா) 35 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

7

வாழ்த்துகள் ரவிசந்திரன் அஸ்வின். பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ravichandran Ashwin: ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த ரவிசந்திரன் அஸ்வின்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.