Virat Kohli Dance: ‘சேட்ட புடிச்ச பையன் சார்...’ இந்தியா - நேபாளம் கிரிக்கெட் போட்டியில் நடனமாடிய விராட் கோலி!

ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் மாதம் 31வது தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, களமிறங்கிய நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை சேர்த்தது.

மழை நின்ற பின்னர் போட்டி 10.15 மணிக்கு துவங்கப்பட்டது. அப்போது இந்திய அணி வெற்றி பெற 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2.1 ஓவரில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது, மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
நீண்ட நேரம் கழித்து களம் இறங்கிய இந்தியா அணி இறுதியில் 20.1 ஓவர்களில் விக்கெட் எதையும் இழக்காமல் 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நடுவே கிரிக்கேட் வீரர் விராட் கோலி பீல்டிங் போது நேபாள பாடலுக்கு உற்சாக நடனம் ஆடினார். இது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -