Ashes: வீண் போன பென் ஸ்டோக்ஸின் சதம்..2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி!
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் எடுத்திருந்தது.
91 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொத்தம் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து.
இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி நாளான நேற்று 257 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்கோர் 177-ல் இருந்த போது டக்கெட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக பென் ஸ்டோக்ஸ் மட்டும் போராடிக்கொண்டிருக்க மறுமுனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்தது. சதம் அடித்த பென் ஸ்டோக்ஸும் ஆட்டமிழக்க வெற்றி பெரும் எண்ணத்தை கைவிட்டது இங்கிலாந்து. 81.3 ஓவரில் 327 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்- அவுட் ஆனது இங்கிலாந்து அணி. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.