SL Vs NED : அதிரடியாக விளையாடிய தனஞ்சய டி சில்வா..எளிமையாக நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை!
உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது நெதர்லாந்து. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிறப்பாக தொடங்குவார்கள் என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. தனஞ்சய டி சில்வா தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 93 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்ரம்ஜித் சிங், மார்க் ஓ டவுட் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்
வெஸ்லி பார்சி, பாஸ் டி லீடே, ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் மட்டும் சிறப்பாக ஆடினார். மற்ற அனைவரும் தொற்ப ரன்களில் வெளியேற அணியின் வெற்றி வாய்ப்பை கண்ணெதிரே தவறவிட்டது நெதர்லாந்து.
40 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கல் மட்டுமே எடுத்தது நெதர்லாந்து அணி. இதனால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை.