Ashes : இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய ஆஸ்திரேலியா!
ஐந்து தொடர்களை கொண்ட அஷஸ் போட்டியின் இரண்டாவது டெஸ்ட் நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து மேக மூட்டமான வானிலையை கருத்தில் கொண்டு முதலில் ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கவாஜா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
9 ஓவர் முடிவில் அணியின் ரன் எண்ணிக்கை இருபதில் இருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்து ஆட ஆரம்பித்த ஆஸ்திரேலியா 73 ரன்கள் எடுத்து இருக்கையில் கவாஜா 17 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடிய வார்னர் அரைசதம் விளாசினார்.
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் ஆட்டமிழக்க துணை கேப்டன் ஸ்மித் களமிறங்கினார். இவர் 32 ரன்கள் அடித்த போது டெஸ்ட் போட்டியில் 9000 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -