Ashes 3rd Test : ஒன் மேன் ஆர்மியாக கலக்கிய இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் நாளிலேயே 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜோ ரூட்(19) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (1) களத்தில் நின்றனர்.
இரண்டாவது நாளான நேற்று ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்திதை தொடங்கினர். தொடக்கத்திலேயே ஜோ ரூட் ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தடுமாறியது.
இங்கிலாந்து கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 108 பந்துகளை எதிர்கொண்ட அவர் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
52.3 ஓவரில் 237 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. 26 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர் வார்னர் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்தவர்களும் நிலைத்து நிற்க வில்லை. இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. மொத்தம் 142 ரன்களுடன் முன்னிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.