Ashes : ஆஷஸ் கோப்பையின் முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!
ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களை அடித்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டகாரரான கவாஜாவை தவிர மற்ற வீரர்கள் மைதானத்தில் சிறிது நேரம் கூட நீடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர். நான்காம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஐந்தாவது நாளான நேற்று, மழையினால் 3 மணி நேரத்திற்கு பிறகே போட்டி தொடங்கப்பட்டது. 173 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான இலக்கை நோக்கி களம் இறங்கியது ஆஸ்திரேலியா. கவாஜா ஒரு பக்கம் தடுப்பு சுவராக இருக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய கேப்டன் கம்மின்ஸ் நிதானமாக ஆடினார். ஆஸ்திரேலியா 209 ரன்கள் அடித்த நிலையில் கவாஜாவும் ஆட்டம் இழந்தார்.
இங்கிலாந்து இன்னும் 2 விக்கெட் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணிய நிலையில் கம்மின்ஸ் இங்கிலாந்தின் கனவை தவிடு பொடியாக்கினார்.
இறுதியாக 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற 28 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்சில் தொடங்கும்.