Asia cup : ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கு ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி
வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசிய கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்க இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் அணி, ‘இந்த ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் நாங்கள் அதில் பங்கேற்க மாட்டோம்’என்று கூறினார்கள்.
இந்த நிலையில் இந்தியா விளையாடும் ஆட்டங்களை இலங்கையிலும் மற்ற ஆட்டங்களை பாகிஸ்தானிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
16 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் மோதுகின்றன. இதில் 3 அணிகள் குருப் ஏ வாகவும் மீதம் உள்ள 3 அணி குருப் பி-யாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
13 ஆட்டங்கள் கொண்ட இந்த ஆசிய கோப்பையில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.