HBD Saran : அஜித்தின் காதல் வாழ்க்கையை தொடங்கி வைத்த சரணுக்கு பிறந்தநாள் இன்று !
ஜோன்ஸ் | 16 Jun 2023 03:35 PM (IST)
1
இயக்குநர் பாலசந்திரன் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர்தான் சரண்
2
பின்னர் இயக்குநர் சரண் தனது முதல் படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். அவரது முதல் படமான காதல் மன்னன் நல்ல வரவேற்பை பெற்றது.
3
காதல் மன்னன் படத்தில்தான் அஜித் ஷாலினிக்கு இடையே காதல் மலர்ந்தது. படத்தில் ரீல் ஜோடியாக இருந்தவர்களை வாழ்க்கையில் டாப் ஜோடியாக மாற்றிய பெருமை சரணையே சேரும்.
4
அதைதொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , அட்டகாசம் என தமிழ் திரையுலகிற்கு பல ஹிட் படங்களை கொடுத்தார்
5
இவரது குரு நாதர் பாலசந்திரன் போலவே இவரது இயக்கமும் இவரை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
6
இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் சரணுக்கு திரை பிரபலங்களும் சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.