Youtube Monetization : யூடியூப் கிரியேட்டர்களுக்கு பணம் சம்பாதிக்க எளிய வழியை வகுத்த யூடியூப் நிறுவனம்!

முன்பெல்லாம் வீட்டுல் ஒருவர் செல்போன் வைத்திருந்த காலம் மாறிப்போய் இப்போழுது அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அதில் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் எளிதில் காணும் வகையில் யூடியூப் வழிவகுத்து உள்ளது.

யூடியூபில் முன்னதாக வீடியோக்கள் மூலம் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்ட, அந்த கிரியேட்டர் குறிப்பிட்ட தகுதிகளை பெற்று இருக்க வேண்டி உள்ளது. தற்போது அந்த விதிகளை யூடுப் நிறுவனம் மாற்றியுள்ளது
கண்டண்ட் கிரியேட்டரால் உருவாக்கப்பட்ட சேனல் 500-க்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று இருக்க வேண்டும் - முன்னதாக 1000-க்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று இருக்க வேண்டும்
365 நாட்கள் எனும் காலவரையறுக்குள் 3000 பார்வை நேரங்களை பெற்று இருக்க வேண்டும் - முன்னதாக 4000 பார்வை நேரங்களை பெற்று இருக்க வேண்டும்
ஷார்ட்ஸ் மூலமாக 30 லட்சம் பார்வைகளை பெற்று இருக்க வேண்டும் - முன்னதாக ஒரு கோடி பார்வைகளை பெற்று இருக்க வேண்டும்
இந்த புதிய விதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
இந்த புதிய விதிகள் இந்தியாவில் எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -