The Ashes : முதல் நாள் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஜோ ரூட்.. தொடங்கியது ஆஷஸ்!
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. அதில் முதல் போட்டி பர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது.
உலக கோப்பை போட்டியில் விளையாடிய ஸ்டார்க் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் களம் இறங்கினர்.
தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை தாங்க முடியாமல் 12 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய ஒல்லி போப்பும் 31 ரன்களில் ஆட்டம் இழக்க ஜோ ரூட் களம் இறங்கினார்.
ஜாக் கிராவ்லியும், ஜோ ரூட்டும் இணைந்து அணி ரன்னை உயர்த்தினர். ஆரம்பத்தில் பொறுமையாகவும் பின்னர் அதிரடியாகவும் ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார்.
ஜாக் கிராவ்லி விக்கெட்டுக்கு பிறகு ஜானி பேர்ஸ்டோவுடன் கைகோர்த்தார் ரூட். இருவரும் சிறப்பாக ஆட ரன்கள் மள மளவென அதிகரித்தது. 78 ரன்களில் எடுத்து ஆட்டம் இழந்தார் ஜானி பேர்ஸ்டோ. முதல்நாள் முடிவில் 393 ரன்களை அடித்து இங்கிலாந்து அணி டிக்லர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.