Dulquer Salmaan : தனுஷிற்கு பதிலாக துல்கர்..மீண்டும் இணையும் வாத்தி படத்தின் காம்போ!
தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வாத்தி. தற்போது இந்த படத்தின் இயக்குநருடன் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார்.
வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
வாத்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. முக்கியமாக “வா வாத்தி” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
நடிகர் துல்கர் சல்மான் இப்போது “கிங் ஆஃப் கோதா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு இவர்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.