Vinayagar Chaturthi Special : விதவிதமான விநாயகர் விக்ரகங்கள்...தமிழ்நாட்டில் களைகட்டும் கொண்டாட்டம்!

Vinayagar Chaturthi Special : தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Vinayagar Chaturthi Special : தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

Continues below advertisement
1/12
அப்பன் ஈசன், அம்மை பார்வதி தேவியின் நடுவே இருக்கும் டிஜிட்டல் விநாயகர் அலங்காரத்தை சேலம் மக்கள் வியந்து பார்த்தனர்
அப்பன் ஈசன், அம்மை பார்வதி தேவியின் நடுவே இருக்கும் டிஜிட்டல் விநாயகர் அலங்காரத்தை சேலம் மக்கள் வியந்து பார்த்தனர்
2/12
சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்ட விவசாய விநாயகர் கையில் உழவுக்கு தேவையான உபகரணங்களை ஏந்தியுள்ளார்.
3/12
கொளத்தூரில் மஞ்சளால் உருவாக்கப்பட்ட மஞ்சள் விநாயகர் சாய்ந்தபடி உள்ளார்.
4/12
கொளத்தூரின் மற்றொரு பகுதியில் காமாட்சி அம்மன் விளக்கால் உருவாக்கப்பட்ட விநாயகரை பல மக்கள் பார்த்து வருகின்றனர்.
5/12
அயோத்தி பாலராமர் தோற்றத்தில் இருக்கும் விநாயகர் சிலை சென்னை புரசைவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது
Continues below advertisement
6/12
திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
7/12
சேலத்தில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர், கிருத்துவர், இந்து என அனைவரும் ஒன்றாக கூடி விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி பிரசாதத்தை பரிமாறிக் கொண்டனர்.
8/12
ஸ்ரீவைகுண்டம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் முழு உருவத்தை பனை ஓலையில் செய்து அசத்தியுள்ளார் பனை தொழிலாளி பால்பாண்டி.
9/12
சென்னை மணலியில் மயில் தோகையால் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் உருவம்
10/12
பிஸ்கேட்டால் உருவாக்கப்பட்ட விநாயகர்
11/12
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முக்குருணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து 18 படியிலான பெரிய கொழுக்கட்டை நெய்வேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு தீபராதனை நடத்தப்பட்டது.
12/12
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள வெங்கடபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 500 கிலோ மைசூர் பாக்கில் விநாயகர் செய்யப்பட்டு சிலைக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன
Sponsored Links by Taboola