32 Forms of Vinayagar : விநாயகருக்கு மொத்தம் 32 அவதாரங்களா? அவை என்னென்ன?
குழந்தை போல் இருக்கும் பாலகணபதி, 8 கரங்களை கொண்ட தருண கணபதி, நான்கு திருக்கரங்களை கொண்ட பக்தி கணபதி, 16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தரும் வீர கணபதி, மடியில் பச்சை நிறத்திலான தேவியை தாங்கியிருக்கும் சக்தி கணபதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபால் போன்ற மேனியை கொண்ட துவிஜ கணபதி, திக்கையில் மோதகத்தை தாங்கி இருக்கும் சித்தி கணபதி, நீல நிறத்தில் இருக்கும் உச்சிஷ்ட கணபதி, ஜொலிக்கும் தங்க நிறத்தில் காட்சியளிக்கும் விக்ன கணபதி.
செந்திறத்தில் காட்சி தரும் ஷிப்ர கணபதி, 5 முகத்தை கொண்ட ஹேரம்ப கணபதி, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் லட்சுமி கணபதி, 10 கரங்களுடனும், மூன்று கண்களுடனும் காட்சி அளிக்கும் மகா கணபதி, பெருச்சாலியின் மீது அமர்ந்திருக்கும் விஜய கணபதி.
ஆறு திருக்கரங்களில் மோதிரம் அணிந்திருக்கும் நிருத்த கணபதி, தாமரை மலர்களை கரங்களில் தாங்கும் ஊர்த்துவ கணபதி, செம்மலம் மாலையை அணிந்த ஏகாட்சர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் கொண்ட வர கணபதி, பெரிய வயிறை கொண்ட ஷிப்ரபிரசாத கணபதி.
மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பொன்னிறத்தில் காட்சி அளிக்கும் திரயாக்ஷர கணபதி, கோடாரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை ஏந்தி இருக்கும் ஏகாந்த கணபதி, சிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கணபதி, 10 திருக்கரங்களை கொண்ட உத்தண்ட கணபதி.
வெண்பளிங்கு மேனியை கொண்ட ரணமோசன கணபதி, காசி சேஷத்திரத்தின் துண்டி கணபதி, இரு முகங்களை கொண்ட துவிமுக கணபதி, மூன்று முகத்துடன் இருக்கும் மும்முக கணபதி, அபயம் மற்றும் வரதம் முத்திரைகளை தாங்கிய சிங்க கணபதி, சிவந்த சூரியனின் நிறத்தில் இருக்கும் யோக கணபதி, பசும்பொன் நிறத்தில் இருக்கும் துர்க்கா கணபதி, நீலநிற பூவை கொண்ட சங்கடஹர கணபதி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -