Vaikasi Visakam : நினைத்ததை நிறைவேற்றும் வைகாசி விசாகம்.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் கூட்டம்!

சித்திரை முதல் பங்குனி வரை வருடந்தோறும் விசேஷ நாட்கள் குவிந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோல் ஆறுமுகன் முருகப் பெருமான் அவதாரம் செய்த வைகாசி விசாகம் தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும், வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
அத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருட சேவை நடைப்பெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகம் கொண்டாடப்படும் இதே நாளில், தமிழ்நாட்டில் தெற்கே உள்ள தாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -