ஹெலிகாப்டரிலிருந்து மலர்தூவி கோலகலமாக நடைப்பெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாத சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருநிலைநாயகி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பழமையான ஆலயம் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
ஆளுநர் துவக்கி வைத்த நாட்டை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெற வந்த ஏராளமான குழந்தைகள் அவருக்காக காத்திருந்து நடனமாடினர்.
சீர்காழி சட்டைநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த மாதம் கோயிலில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் ஐம்பொன் சிலைகளை தமிழக ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -