Karthigai Deepam : சிவனிடம் சரணாகதி.. திருவண்ணாமலை மகாதீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது.
நினைத்தாலே முக்தி தரும் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் திருவண்ணாமலை நினைவுக்கு வந்துவிடும். கார்த்திகை மாதம் வரும் திருகார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உன்னாமலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைப்பெற்றது.
டிசம்பர் 10 ஆம் தேதி - காலை உற்சவம் - காலை 6 மணிக்கு மேல் 6:48 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர்வு படம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம்.
டிசம்பர் 11 ஆம் தேதி - காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம்
டிசம்பர் 12 ஆம் தேதி -காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.
டிசம்பர் 13 ஆம் தேதி -அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம்.