Sabarimala: சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு தினமும் காலை, மாலை ஐயப்ப சுவாமியை வணங்கி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமியை தரிசிப்பது ஜதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற நேற்றைய முன்தினம்15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநில அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜைகள் செய்யும் நேரம், போக்குவரத்து வசதிகள் பற்றி தெரிந்துக் கொள்ளும் வகையில் Swami chatbot என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது கேரள அரசு. இந்த செயலில் AI (Artificial intelligence) தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய ஆறு மொழிகளில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் சபரிமலையில் கோவில் நடை திறப்பு, பூஜை நேரம், வெளி மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு பாதை தடம் மாறாமல் சபரிமலை கோவில் வந்தடைய வேண்டிய பல்வேறு வழித்தடங்களை காண்பிக்கும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பூஜை செய்துவிட்டு தாமதமாக வரலாம் என்பதால், உங்கள் KSRTC ஆன்லைன் டிக்கெட்டைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறீர்களா? இப்போது, இது உங்களைத் தொந்தரவு செய்யத் தேவையில்லை, ஏனெனில் நீங்கள் முன்பதிவு செய்த பேருந்து புறப்பட்ட 24 மணிநேரத்திற்கு பம்பையிலிருந்து மற்ற இடங்களுக்கு ஆன்லைன் டிக்கெட்டுகளின் செல்லுபடியை நீட்டிப்பதாக KSRTC அறிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -