Somavara Vratham 2024:கார்த்திகை மாத சோமவாரம் - வீட்டில் பூஜை செய்யும் வழிமுறைகள் தெரியுமா?
கார்த்திகை மாதத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன், ஐயப்பன் என பல தெய்வங்களுக்கும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. வாரத்தின் முதல் வேலைநாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.சிவபெருமானுக்கு உகந்த இந்த திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். சோமவாரத்தில் எப்போதும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான இன்று காலையிலே தலைக்கு குளித்துவிட வேண்டும். வீட்டில் உள்ள அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வீட்டில் உள்ள சிவபெருமானின் படம், சிவ லிங்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பூஜைக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிவன் படத்திற்கோ அல்லது சிவலிங்கத்திற்கோ வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
வில்வ இலைகள் கிடைக்காத பட்சத்தில் மற்ற பூக்கள் கொண்டு பூஜை செய்யலாம். பூஜைக்காக நைவேத்தியம் படைக்க வேண்டும். கற்கண்டு, பால், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து நைவேத்தியம் படைக்கலாம். நைவேத்தியம் முழுவதும் படைக்க இயலாதவர்கள் தங்களுக்கு கிடைத்தவற்றை வைத்து நைவேத்தியம் படைக்கலாம்.
சோமவார விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள் ஒரு வேளை சாப்பிட்டோ அல்லது மாலை வரையோ விரதம் இருக்கலாம். பக்தர்கள் தங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவாறு விரதம் இருக்கலாம். கண்டிப்பாக சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
சோமவார விரதம் இருப்பவர்கள் சிவபூஜையின்போது சிவ புராணம், சிவமந்திரம் படிப்பது சிறப்பு ஆகும் மாலையில் பூஜையை நிறைவு செய்து, நைவேத்தியமாக படைக்கப்பட்டதை சாப்பிட்டு தங்களது விரதத்தை செய்யலாம்.
கார்த்திகை மாதமானது முருகருக்கும் உகந்த மாதம் என்பதால் இந்த சோமவார பூஜையில் முருகனையும் வழிபடலாம். முருகன் வழிபாட்டின்போது கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவை படிப்பது நல்லது ஆகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -