Tiruvannamalai Girivalam : ஆடி பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பை குறிக்கும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் வருடந்தோறும் மக்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநினைத்தாலே முக்தி தரும் இடமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை மாதத்தின் போது தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும்
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படும் நிலையில், மலையை சுற்றிய பாதையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
கார்த்திகை மாதத்தை தவிர்த்து, ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமி அன்றும் மக்கள் அலைகடலென திறண்டு வருவார்கள்
மூலவராகிய அண்ணாமலையாரை தவிர்த்து கிரிவல பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்டலிங்ககளை மக்கள் வழிபடுவார்கள்.
இந்நிலையில் ஆடி மாத பெளர்ணமி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், வழக்கத்தை விட அதிகமான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -