Kandadevi Temple : கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் சிறப்பு தேரோட்டம் ; பிரமிக்க வைக்கும் கிளிக்ஸ்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி ஊரில் மீண்டும் தேர் ஓடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 டி.ஐ.ஜி ,12 எஸ் பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேளதாளங்கள் முழங்க சொர்ணமூர்த்தீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார்.
அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து தேரோட்டம் நடத்த முடிவானதை அடுத்து, முன்அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பலத்த சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.