Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம் ஏற்றப்படும்.விளக்குகளை இரண் டொரு நாட்கள் முன்பே எடுத்து நீரில் நன்கு ஊறவிடவும். பின்னர் எடுத்துத் துடைத்து வெயிலில் காய வைத்துக்கொள்ள எண்ணெயை விளக்குகள் உறி யாமல் இருக்கும்.
விளக்குகளை இரண் டொரு நாட்கள் முன்பே எடுத்து நீரில் நன்கு ஊறவிடவும். பின்னர் எடுத்துத் துடைத்து வெயிலில் காய வைத்துக்கொள்ள எண்ணெயை விளக்குகள் உறி யாமல் இருக்கும்.
புது விளக்கானாலும் அதனை தண்ணீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள் வது நல்லது. காரணம் மண் விளக்குகளில் காற்றுப் புகுந்து ஏதேனும் திரவம் படும் வேளையில் மண் காற்றை வெளியேற்றி விட்டு நீரை அல்லது எண்ணெய்யை உறிஞ்சுக் கொள்ளும். இதனைத் தடுக்கவே நீரில் ஊறவகைக்கும் முறை.
விளக்கேற்ற நல்லெண்ணெயே எக்காலத்திலும் உகந்தது. உடன் விளக்கெண்ணெய் கலந்து விளக்கேற்ற நீண்ட நேரம் நின்று எரியும்.
சிறியதாக வெட்டிய வாழை இலைத் துண்டுகள் அல்லது வாழை மட்டைத் துண்டுகள் அல்லது சிறிய ஊறுகாய் தட்டுகள், என இவற்றைப் விளக்குகளுக்கு அடியில் பயன்படுத்த எண் ணெய் வழிந்து தரையில் பிசுபிசுப்பு ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.