Karthigai Deepam 2023: திருவண்ணாமலை மகிமைகள்.மழையில் நனைந்தபடி கிரிவலம் செல்லும் பக்தர்கள்!
ஜான்சி ராணி | 26 Nov 2023 03:55 PM (IST)
1
இன்று கார்த்திகை தீப திருநாள். திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இன்னல்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
2
இன்று காலை முதலே திருவண்ணாமலையில் அண்ணாமலையாரையும் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
3
இந்நிலையில், மழை பெய்தபோது பக்தர்கள் குடையுடன் கிரிவலம் சென்றனர்.
4
திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.
5
அதை காண பக்தர்கள் ஆவலுடன் மழையிலும் அண்ணாமலையானை தரிசிக்க காத்திருக்கின்றனர்.
6
மகா தீபம் காண்பது எல்லா வளங்களையும் தர வல்லது என்று சொல்லப்படுகிறது.