Karthigai Deepam 2023: கார்த்திகை தீபம் - வீட்டுகளில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன?
இன்று திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் என்று சொல்லப்படுகிறது.
இறைவன் ஜோதி வடிவானவன். அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உலகிற்கு சிவ பெருமான் உணர்த்திய தினமே கார்த்திக் தீபத் திருநாள்.
திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதை தரிசித்து விட்டு, 6.05 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கேற்றுவது எல்லா வளங்களையும் தரும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதற்கு ஆன்மீக நிபுணர்கள் சொல்வது - குறைந்தபட்சமாக 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
நல்லெண்ணெய், ஐந்து வகை எண்ணெய்களையும் பயன்படுத்தி விளக்கேற்றலாம். குறைந்த பட்சம் ஒரு விளக்காவது நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
துன்பங்கள் விலகிடவும் எப்போதும் நன்மை கிடைத்திடவும் விளக்கேற்றி வழிபடவும்.