Vaikasi Brahmotsavam 2024 : தொடங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்!
வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
மே மாதம் இருபதாம் தேதி ( 20- 05-2024 ) : அதிகாலை 2:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தங்கச் சப்பரம் வாகனத்தில் காலை சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மே மாதம் 21ஆம் தேதி ( 21- 05-2024 ) : அன்னப்பறவை வாகனத்தில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில், சூரிய பிரபை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மே மாதம் 22 ஆம் தேதி ( 22- 05-2024 ) : திருவிழாவிற்கு மிக முக்கிய உற்சவம் மாத இருக்கக்கூடிய கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் உற்சவம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு அத்திகிரி மலையில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு உற்சவம் அனுமந்த வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.
மே மாதம் 23 ஆம் தேதி ( 23- 05-2024 ) : நாக வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் , காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா தரிசனம் தருகிறார். தொடர்ந்து நெல் அளவை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
மே மாதம் 24 ஆம் தேதி ( 24- 05-2024 ) : தங்க பல்லாக்கு உற்சவம் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை வேலையில் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.
மே மாதம் 25ஆம் தேதி ( 25- 05-2024 ) : ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோளத்தில் தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். இதனை தொடர்ந்து சொர்ண அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை வேலையில் யானை வாகனத்தில், வீதி உலா மற்றும் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.
மே மாதம் 26ஆம் தேதி ( 26- 05-2024 ) : விழாவின் பிரதான திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில் உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை உற்சவம் கிடையாது.
மே மாதம் 27ஆம் தேதி ( 27- 05-2024 ) : பகல் 2:30 மணி அளவில் தொட்டி திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே மாதம் 28ஆம் தேதி ( 28- 05-2024 ) : ஆள்மேல் பல்லாக்கு ( மட்டை அடி உற்சவம் ) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -