கோவிந்தா கோஷம் முழங்க நடைப்பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்!
ராமானுஜர் அவதரித்ததால் இது நித்திய சொர்க்கவாசல் தளமாக கருதப்படுகிறது. இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇக்கோவிலின் புராண பெயர் பூதபுரி என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சொர்க்கவாசல் கிடையாது வைகுண்ட ஏகாதசி அன்று ஆதி கேசவர் மற்றும் ராமானுஜர் இருவரும் பூதகால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.
அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் இங்கு உள்ள சன்னதி கதவை திறப்பார்கள். இது கோவிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
ராகு- கேது தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இங்கு தரிசனம் மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை
ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ராமானுஜர், இவருக்கு இளைய ஆழ்வார் என பெற்றோர் பெயர் சூட்டினார். கோவில் எதிரே ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் தற்பொழுது உள்ளது.
இங்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களும் ராமானுஜர் எழுந்தருளி தரிசனம் தருவார். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார விழா நடைபெற்று வருகிறது.
ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் கடந்த மே 02 ஆம் தேதி கோலகலமாக துவங்கியது. அதனை தொடர்ந்து ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் 50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.
பெண்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . தேர் திருவிழாவை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் பாரம்பரிய பானகம் ஆகியவற்றை வழியெங்கும் வழங்கினர்.
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியும் பஜனை பாடியும் உற்சாகமாக நடனமாடியும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -