Vidya Saraswathi Homam : பாளையங்கோட்டை ஸ்ரீ மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் நடைப்பெற்ற வித்யா சரஸ்வதி ஹோமம்!
தென் இந்தியாவின் ஆக்ஸ்போா்டு என்று அழைக்கப்டும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீவேதநாராயணா் ஸ்ரீஅழகியமன்னாா் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்விக்கு அதிபதியான மூலவா் ஸ்ரீவேதநாராயணா் அருளினால் ஆண்டுதோறும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவ மாணவியா் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிடவும் வாழ்வில் மேன்மை அடையவும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக இன்று காலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடிமரம் மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் இராஜ அலங்காரத்தில் ஏழுந்தருளி அருள்பாலித்தாா்.
பெருமாள் முன் ஹோமகுண்டம் மற்றம் நவகலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தோ்வு எழுதும் மாணவ மாணவியாின் பெயா் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்பட்டது.
ஆச்சாா்ய பெருமக்களால் வெண்தாமரை, வெண்கடுகு, வெல்ல பாயாசம் மற்றும் ஹோம திரவியங்கள் கொண்டு வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்று மகாபூர்ணாகுதி நடைபெற்றது
ஹோமம் நடைபெறும்போது மாணவ மாணவியா்கள் ஹயக்கீாிவா் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் பாடி பிரார்த்தனை செய்தனா்.
கலந்துகொண்ட மாணவ மாணவியா்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுதுகோல் (பேனா) நெல்லிக்கனி வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -