முருகனின் ஆறாவது படை வீடு : பழமுதிர்சோலையில் நடைபெற்ற தைப்பூச திருவிழா!
முருகனின் 6-வது படைவீடான அழகர் மலை பழமுதிர்சோலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நிகழ்வு புகைப்படம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதைப்பூச திருவிழாவையொட்டி பழமுதிர்சோலையில் முருகப் பெருமான் அன்ன வாகனத்தில் எழுந்தருளியபோது.
பழமுதிர்சோலையில் தைப்பூசம் நான்காவது நாள் திருவிழாவில் ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
பழமுதிர்சோலையில் தைப்பூசம் 6-வது நாள் திருவிழாவில் ஆட்டுக்யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
அழகர் கோவில் மலை மீது தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழமுதிர்சோலை முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கோவிலின் வடபுறத்தில் அமைந்துள்ள தீர்த்தத் தொட்டியில் நூபுர கங்கை தீர்த்தம் நிரப்பப்பட்டு அதில் வேலுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி கோயில் அர்ச்சகர் முத்துக்குமாரசுவாமி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -