Thai Poosam 2024 : பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தைப்பூசம் நடைபெறுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்தியாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பக்தர்கள் 3 அடி முதல் 22 அடி வரையிலான அழகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா பக்தி கோசம் முழங்கவும் , பக்தி பாடல்களுக்கு ஆடியும் உற்சாகமாக பாதயாத்திரையாக வந்து பக்தி பரவசம் அடைந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்து உள்ளதால் திருச்செந்தூர் பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் போன்று காட்சியளிக்கிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரும் தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -