கோலாகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா!
வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமரிசையாக நடைபெறும் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதைப்பூச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
மீனாட்சி தெப்ப திருவிழாவை காண மக்கள் வெள்ளம் தெப்பத்தை சுற்றியும் காண முடிந்தது.
சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர்.
வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
இன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்
நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -