Panguni Uthiram 2024 : மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோயில் உள்ளது.
இன்று, பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மயில் வாகனம் உருவம் பொறித்த கொடிப்பட்டதிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி மரத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய ஸ்வாமிகள் 20 ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் பங்கேற்று கொடியேற்றினார்.
வருகின்ற 23ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும் 24 ஆம் தேதி காலை தீர்த்தவாரியும் அன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
விழா நாள்களில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞானபாலய ஸ்வாமிகள் 20 ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.