Ramzan Fasting Tips : நோன்பு வைக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றுங்க!
உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். நோம்பு ஆரம்பிக்கும் முன்னரும்,பின்னரும் தாகம் எடுக்கவில்லையென்றால் கூட தேவையான நீரை அருந்தவும். உடலை வறட்சியாக்கும் காஃபின் பானங்களை தவிர்க்கவும்.
நோன்பு முடித்த பிறகு வகை வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளவும். அதில் நார்ச்சத்து, புரதம் இதர வைட்டமின் மற்றும் மினரலஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். துரித உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பழம், காய்கறிகள், இறைச்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
நோன்பு தொடங்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தேர்வு செய்து தரமான உணவுகளை, அளவோடு சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சி செய்ய மறந்துவிடாதீர்கள். நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற லேசான உடைப்பயிற்சிகளை செய்து உடலை திடமாக வைத்துக்கொள்ளுங்கள்
நோன்பிற்கு முன் (சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர்) ஸ்மூத்தி பவுல் போன்ற நிறைவான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதில் அனைத்து வகையான சத்து கிடைக்கும். முட்டை,யோகர்ட், பால், தயிர், வாழைப்பழம் போன்ற உணவுகளை சேர்க்கலாம்.
இளம் குழந்தைகள், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், மோசமான நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள் நோன்பு வைப்பதை தவிர்க்கவும். மாதவிடாய் காலத்திலும் கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் காலாத்திலும் பெண்கள் நோன்பு வைப்பதை தவிர்க்கவும்.