25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரும் பாரம்பரியம்.. மதுரையில் கோலாகலமாக நடந்த புரவை எடுப்பு பெருவிழா!
திருமங்கலம் அருகேயுள்ள நெடுமதுரை கிராமத்தில் ஸ்ரீஅய்யனார்சாமி திருக்கோவிலில் குதிரை எடுப்பு பெருவிழா 25-ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழைமை வாய்ந்த ஸ்ரீஅய்யனார்சாமி., திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குதிரை எடுப்பு பெருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நெடுமதுரை கிராமப் பொதுமக்கள் ஏற்பாட்டின் பேரில் சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஊர் திருவிழா என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊர் மந்தையில் மருளாடிகளுக்கு சாமி இறக்கிய பின்னர் மேளதாளம் முழங்கிட குதிரைகளை கண்மாய்கரை அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தங்களது காவல் தெய்வங்களை பொதுமக்கள் பயபக்தியாக தூக்கிச் சென்றனர்.
மதுரை, நெடுமதுரை கிராமத்தில் 25-ஆண்டுகளுக்கு பின்பு புரவை எடுப்பு பெருவிழா கோலகாலமாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த ஸ்ரீஅய்யனார்சாமி., திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குதிரை எடுப்பு பெருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நெடுமதுரை கிராமப் பொதுமக்கள் ஏற்பாட்டின் பேரில் சிறப்பாக நடைபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -