Lady Snows Tuticorin : தங்கத்தேரில் பவனி வரும் பனிமய மாதா.. தூத்துக்குடியில் குவிந்த மக்கள் கூட்டம்!
புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 441வது திருவிழாவானது, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த தங்க தேரானது சுமார் 1.50 கோடி மதிப்பில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அன்னையின் மங்கள மாலையான ஜெபமாலை நினைவு கூறும் வகையில் 53 அடி உயரத்தில் தங்க தேர் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற ஆலயங்களில் நடைபெறும் தேரோட்டத்தில் பீடத்தில் உள்ள சொருபத்தை நேரில் எடுத்துச் செல்வது கிடையாது. ஆனால் பனிமயமாத ஆலயத்தில் அன்னையின் சுருபம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகிறது.
இந்த தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.அன்னையை சுற்றிலும் ஒன்பது கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் அன்னையை சுற்றி ஒன்பது மீன்கள் உள்ளன .மேலும் அன்னைக்கு தங்க கிரீடமும் அணிவிக்கப்பட்டுள்ளது .பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் இந்த கிரீடம் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை வைரக்கற்கள், வண்ணக் கண்ணாடிகள், பாசிமணிகள், வெல்வெட் துணி ஆகியவற்றோடு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட காகிதங்களை கொண்டு தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -