‘பாய்ந்தோடும் காவிரியே..’ ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டத்தில் குவிந்த மக்கள்!
ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர்.
கடந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணமாக ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் சென்றாலும் குடும்பத்துடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய கரையில் புதுமண தம்பதிகளும்,பெண்கள் சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர்.
குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாரதனை காண்பித்து பின்பு பழம் அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர்.
காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாறி மாறி கட்டி கொண்டனர்.
வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -