17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்!
சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலாகும்.
தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது தேரை இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான ஊழியர்கள் இழுத்தனர்.
தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது அதற்குள் நின்று கிராம மக்கள் தேர் வெள்ளோட்டத்தை பார்த்தனர்.
தேர் வெள்ளோட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது
தேர் வெள்ளோட்டத்தைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தேரோட்டமானது கோவில் வாயிலிருந்து புறப்பட்டு கோவிலுக்குச் சொந்தமான குளத்தை சுற்றி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் கோயிலின் வாசலில் நிலைக்கு வந்தது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி சொந்த மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றுது.