Kanchi Kamatchi : தங்கத்தேரில் வைரமாக ஜொலித்த காஞ்சி காமாட்சி..பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் விளங்கி வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி ஒட்டி தங்க ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி வெகு சிறப்பாக நடைபெற்றது
காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சித்திரை மாத பௌர்ணமி என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் அருள் பெற வேண்டி ஏராளமானோர் வருகை புரிந்து காமாட்சி அம்மனை வழிபட்டு சென்றனர்.
உற்சவர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, குங்கும நிற பட்டு உடுத்தி ,லட்சுமி ,சரஸ்வதி தேவியர்கள் நீல நிற பட்டு உடுத்தி மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு வீதி உலா வந்து காட்சியளித்தார்
காமாட்சி அம்மன் கோவிலில் தங்கரத உற்சவத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க ரதத்தின் வடம் பிடித்து இழுத்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்து ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் வழிபட்டு மகா தீபாராதனை காண்பித்து அருள் பெற்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -