Nadavavi Kinaru : பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்.. நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா!
தமிழகம் முழுவதும் நேற்று சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்று இரவு, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று காலை பல்வேறு கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத் தொடர்ந்து ஐயங்க ஐயங்கார்குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டார்.
அதன் பின் சிறப்பு மலர் அலங்காரத்தில் கேடய வாகனத்தில், அதே பகுதியில் பூமி மேற்பரப்பில் இருந்து 15 அடி ஆழத்தின் கீழ் அமைந்துள்ள நடாவவி கிணறு கல்மண்டபத்தில் எழுந்தருளி கல்மண்டபத்தினை மூன்று முறை வலம் வந்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது
பின் பூமியின் மேல்பரப்பிற்கு வந்து, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தந்த பின் பாலாற்றிக்கு வேதங்கள் முழங்க வந்தடைந்தார்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிணற்றின் முன் உள்ள கல் வளைவு ஆனது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறார். பூமிக்கு அடியில் உள்ள மண்டப கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -