Chitra Pournami : கண் கோடி வேண்டும் சித்திரகுப்தரை தரிசிக்க..ஓடோடி வந்த பக்தர்கள்!

உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம்,கோவில் நகரமான காஞ்சிபுரத்தில்,பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்தர் சுவாமி எனும் பெயரில் தனி கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கும் இக்கோவிலில் சித்ரகுப்த சுவாமிக்கு சித்ரா பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி திருமண வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் சித்ரா பௌர்ணமியான இன்று, கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சாத்தி மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்த சுவாமியை தரிசனம் செய்து தங்கள் வாழ்வின் பாவ புண்ணியங்களை பார்த்து எழுத வேண்டி, எள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பக்தர்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் இன்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -