Aadi Perukku 2024 : தொட்டதெல்லாம் துலங்கும்.. தமிழ்நாடெங்கும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள். ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு என்று அழைக்கிறோம். இந்த நாளில் தொடங்கும் செயல் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், ஏரி மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்கு.
ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல சகலரும் வழிபட வேண்டிய அற்புதமான திருநாள் இந்த ஆடிப் பெருக்கு.
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய் மற்றும் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டு காவிரி தாயை வழிபட்டு வருகின்றனர்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மாமண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர். புதுமணத்தம்பதிகள் பூஜைகள் செய்து தாலி மாற்றிக்கொண்டனர்.
தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குலிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -