Yercaud 47th Flower Show : ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!
ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் மலர் கண்காட்சி வருகின்ற மே 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்
ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மலர்கள் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.
அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட பல வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
7 லட்சம் மலர்களைக் கொண்டு நடத்தப்படும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி பார்ப்பர்வர்கள் கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் விருந்தளிக்க காத்திருக்கிறது.