Solar Eclipse 2025: நாளை பகலில் மறையும் சூரியன்: சூரிய கிரகணத்தின் நேரம் எப்போது? என்ன செய்யக் கூடாது?
நாளை ( மார்ச் 29 ஆம் தேதி ) வானியலின் அற்புத நிகழ்வான சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
கிரகணம் என்றால் மறைக்கும் என்றும், இருள் என்றும் பொருள் கொள்ளப்படும். அதாவது கிரகணம் ஏற்படும் நேரத்தில், சூரியன் மறைந்து காணப்படும். இந்நிலையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும். இதனால் , சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணமானது, இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி முதல் மாலை 6. 13 மணிவரை நிகழும் எனவும், மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சூரிய கிரகணமும் உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் எனவும், இந்தியாவில் தெரியாது. ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும். மேலும், வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் என்பதால், இதன் அனுபவத்தை தெளிவாக கண்டு ரசிக்கலாம் என கூறப்படுகிறது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது இல்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றன. இந்நிலையில், சூரிய கிரகணத்தை, அதற்கென தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடி கொண்டு பார்ப்பது பாதுகாப்பானது எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், அடுத்த சூரிய கிரகணமானது வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நிகழும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.