Narendra Modi's US visit: அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி - என்ன திட்டம்?
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியை பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகார்கள் ஆகியோர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்கு அளிக்கப்பட்டது.
நரேந்திர மோடி, அங்கிருந்த பொதுமக்களுடன் கைகளை குலுக்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டவர் பிளேயிர் மாளிகைக்கு சென்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பை முதன்முறையாக சந்திக்க இருக்கிறார்.பிராந்திய மற்றும் சர்வதேச நிலைமை குறித்த விவாதங்களைத் தவிர, பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்-மோடி சந்திப்பைத் தொடர்ந்து மாலையில் அமெரிக்க அதிபருடன் தனிப்பட்ட இரவு விருந்து நடைபெறும். சந்திப்புக்கு முன்னரோ அல்லது பின்னரோ இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்திப்பார்கள்.
பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த உயர்மட்ட தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.