திரைப்பட வரலாற்றில் புதுமுயற்சி: விண்வெளிக்கே சென்று படம் ஷூட் செய்யும் ரஷ்யக்குழு... வாவ் புகைப்படங்கள்
ஹாலிவுட்டுக்கே தற்போது சவால் விடும் வகையில் ரஷ்யா விண்வெளிக்கே சென்று திரைப்படம் எடுத்துவருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App. திரைப்படத்தின் பெயருமே 'The Challenge'. இதன்மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் நாடு என்கிற பெருமையை ரஷ்யா பெறுகிறது
கஜகஸ்தானில் உள்ள பைக்கானர் விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்குச் செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இந்தப் படம்.
இதற்காகத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை தற்போது கேமிராமேனுடன் விண்வெளிக்குப் பயணமாகியுள்ளார்.
நடிகர் யூலியா, காஸ்மோனாட் ஆண்டன் ஸ்காப்லெராவ் அடங்கிய கலம் விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் விண்வெளியில் தங்குவதற்காக சிறப்புப் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் 12 நாட்கள் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -